கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ரேணுகா லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இது செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரியான செயலாகவே அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தற்போது சுமார் 1,500 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முன்னர் நல்ல போஷாக்கான உணவு வழங்கப்பட்டபோதிலும், தற்போது சோற்றுடன் இரண்டு கறிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அவற்றில், பூசணிக்காய், பருப்பு, உருளைக்கிழங்கு, மாங்காய் கறி, கரட் என ஏதாவது இரண்டு கறிகளுடன் மாத்திரமே சோறு வழங்கப்படுகிறது. ஒரு துண்டு மீன் அல்லது முட்டை தற்போ வழங்குவதில்லை.
மேலும், நோயாளிகளுக்கு முன்னர் ஆரஞ்சு பழம், தயிர், யோகட், ஜெலி போன்றனவும் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அவை வழங்கப்படுவதில்லை.
நீரிழிவு நோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை.
அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுகிறது. நோயாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு சத்தான உணவு கூட கிடைப்பதில்லை.
சுகாதார பணியாளர்களுக்கு தேங்காய் சம்பல், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் பூசணி போன்றவற்றுடனே சோறு பரிமாறுகிறார்கள் “என்றார்
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!