வவுனியாவில் சுகாதார துறையினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

57

வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் தொடர்பை பேணிய சுகாதார துறையினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (04.05) குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட நோயாளர் காவு வண்டி சாரதி பணியாற்றிய அலுவலகத்தில் கடமையாற்றியோர், தொடர்பை பேணியோர் என சுகாதார துறையினரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் உடன் பணியாற்றிய சாரதிகள், உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என 13 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: