பெரல் சங்க கைது!

109

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஹேரத் முதியங்செலாகே பிரபாத் மதுசங்க எனும் பெரல் சங்க பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பேலியகொட, கெமுனு மாவத்தையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 4 கிராம் 130 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயதங்களை காண்பித்து பயமுறுத்தல், போதைப்பொருள் விநியோகம், கொள்ளை மற்றும் கொலை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபருக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: