கனடா ஒன்றாரியோ மாநிலத்தில் சீரற்ற காலநிலை காரணமான ஏற்பட்ட இடி, மின்னல் மற்றும் மணிக்கு சுமார் 120 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய புயல் காற்று என்பவற்றால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 9 பேர் இது வரை உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கணக்கிடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சுமார் மூன்று லட்சத்தி ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதியின்றி அல்லல் படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரசகால நிலையை அமுல்படுத்தியுள்ள அரசு மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருப்பதாகவும், இதுவரை சுமார் தொன்னூற்றி ஐந்தாயிரம் மக்கள் மீண்டும் மின்சார வசதியை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை இன்னும் முழுமையாக சீரான நிலைக்கு திரும்பவில்லை என ஒன்றாரியோ செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்
- நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்!
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்! – எரிசக்தி அமைச்சர் கோரிக்கை
- உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய அதிக காலம் எடுக்கும்!!
- புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்தும் ரணில்!
- தொடரும் நெருக்கடி நிலை; அறுவைச் சிகிச்சைகளும் பாதிப்பு!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்