• Mar 29 2024

அமைதி வழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உயிராபத்து - வெளியான பரபரப்பு தகவல்! samugammedia

Chithra / May 11th 2023, 2:55 pm
image

Advertisement

நாட்டில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த மக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. - இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் நிகேஷல மீது கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாக்கியவர்கள் என இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும், அவர்களை கவனமாக இருக்குமாறும் பல்வேறு அச்சுறுத்தல் ரீதியிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் சகலரும் தாக்குதல்களுக்கும், உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.

அத்துடன், இப்போராட்டத்தின் பக்கவிளைவுகளின் பயனாகவே தற்போதைய அதிபரும் பதவிக்கு வந்துள்ளதால், அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியே நேற்றைய தாக்குதலுமாகும் எனக் கூறப்படுகிறது.

எனவே, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் தலையிட வேண்டும். இவ்வாறு, மேற்குறிப்பிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் நமது கடற்பரப்பில் அதிகளவு இரசாயனங்கள் கலந்ததால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும்,இதற்கு முன் நிவ் டயமன்ட் விபத்து இடம் பெற்றதாகவும்,கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு பிறகு கடற்ப்பரப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்நிகழ்வுகளை பார்க்கும் போது இதில் ஒரு சதி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம்,நீலப் பொருளாதாரம் குறித்து பேசினாலும்,நமது நாட்டில் அது வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் இருப்பதாகவும்,அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இது மேலும் தெளிவாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று எந்த மாற்றமும் இன்றி தற்போதைய ஜனாதிபதியும் செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,நிவ் டயமன்ட் சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை யாது என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல்,நிவ் டயமன்ட் ஆகிய இரு துயர சம்பவங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும்,இந்த முறையற்ற போக்கால் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கசிவு இருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதித்த தரப்பினர் யார் என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் மிக உயர்தரத்திலான சேவைகளைக் கொண்ட துறைமுகம் எங்களிடம் காணப்பட்டாலும் இந்த விபத்தின் போது,அதைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இருக்கவில்லை எனவும்,இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்ததாகவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய இந்த விவாதத்தை நிறுத்த பாரிய சதி நடந்ததாகவும்,தாம் கப்பல் தரப்பு சார்பில் பேசவில்லை எனவும்,நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரப்பினர் சார்பாகவே பேசுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

அமைதி வழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உயிராபத்து - வெளியான பரபரப்பு தகவல் samugammedia நாட்டில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த மக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. - இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.இதேவேளை, நேற்றைய தினம் நிகேஷல மீது கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாக்கியவர்கள் என இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும், அவர்களை கவனமாக இருக்குமாறும் பல்வேறு அச்சுறுத்தல் ரீதியிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் சகலரும் தாக்குதல்களுக்கும், உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.அத்துடன், இப்போராட்டத்தின் பக்கவிளைவுகளின் பயனாகவே தற்போதைய அதிபரும் பதவிக்கு வந்துள்ளதால், அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியே நேற்றைய தாக்குதலுமாகும் எனக் கூறப்படுகிறது.எனவே, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் தலையிட வேண்டும். இவ்வாறு, மேற்குறிப்பிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் நமது கடற்பரப்பில் அதிகளவு இரசாயனங்கள் கலந்ததால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும்,இதற்கு முன் நிவ் டயமன்ட் விபத்து இடம் பெற்றதாகவும்,கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு பிறகு கடற்ப்பரப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்நிகழ்வுகளை பார்க்கும் போது இதில் ஒரு சதி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம்,நீலப் பொருளாதாரம் குறித்து பேசினாலும்,நமது நாட்டில் அது வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் இருப்பதாகவும்,அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இது மேலும் தெளிவாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.கோட்டாபய ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று எந்த மாற்றமும் இன்றி தற்போதைய ஜனாதிபதியும் செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,நிவ் டயமன்ட் சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை யாது என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.எக்ஸ்பிரஸ் பேர்ல்,நிவ் டயமன்ட் ஆகிய இரு துயர சம்பவங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும்,இந்த முறையற்ற போக்கால் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கசிவு இருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதித்த தரப்பினர் யார் என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.உலகில் மிக உயர்தரத்திலான சேவைகளைக் கொண்ட துறைமுகம் எங்களிடம் காணப்பட்டாலும் இந்த விபத்தின் போது,அதைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இருக்கவில்லை எனவும்,இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்ததாகவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.தற்போதைய இந்த விவாதத்தை நிறுத்த பாரிய சதி நடந்ததாகவும்,தாம் கப்பல் தரப்பு சார்பில் பேசவில்லை எனவும்,நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரப்பினர் சார்பாகவே பேசுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement