தென்அமெரிக்க நாடான ஈக்குவாடரில் 9 வது நாளாக தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் எரிபொருள் பிரச்சனை, விவசாய பொருட்களின் விலையேற்றம், மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போதைய அதிபர் கில்லார் மோலா சோர்வின் ஆட்சிக்கு எதிராக சுமார் 1,000 ற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் வீதிகளில் இறங்கி கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் துறை நிலையங்களை மக்கள் முற்றுகையிட்டு அவற்றுக்கும் சேதமேற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பற்றிசியோ கருத்தே தெரிவிக்கும் போது, “தற்போது வரை 18 அரச அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாகவும், கலவரவங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களினால் மேற்கொள்ளப்படும் அரசிற்கெதிரான இந்த போராட்டம் மேலும் வலுவடைந்து சென்று கொண்டிருப்பதாகவும், இந்த பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.