சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் சடலங்களை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் மக்கள்

213

அடைமழை காரணமாக பல இடங்களிலும் மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளான நிலையில், இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு கயிறு கட்டி இழுத்துச் சென்ற சம்பவமொன்று திருவண்ணாமலையில் பதிவாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக, சுடுகாடு பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுகாணப்பட்டுள்ளது

இதன் காரணமாகவே, இறந்தவர்களின் சடலத்தை வீதியால் கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள ஆவணியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில், தொடர் கனமழை காரணமாக. 6 அடிக்கு மேல் ஆற்றுநீர் நிரம்பி வழிந்தோடுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல், சடலத்தை சுமந்து செல்லும் பாடையை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவல நிலைக்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து இந்த கிராம மக்கள், சுடுகாட்டிற்குச் செல்ல பாலம் கட்டித்தருமாறு குறித்த மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: