ஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்..!

129

மாசி மாதம் அல்லது சித்திரையில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மேலும் வாரணாசியில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், இதற்காக உற்பத்தியை அதிகரிக்குமாறு எண்ணெய் உற்பத்தி நாடுகளை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

அத்தோடு கடந்த ஏப்ரலில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெட்ரோல்-டீசல் தேவை குறைந்தது. அதன் எதிரொலியாக முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்தன.

மேலும் தேவை அதிகரித்த பின்னரும், லாப நோக்கில் அந்த நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல் உள்ளன. இதன் காரணமாகவே உள்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதாக தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: