• Mar 28 2024

மதுபான விற்பனை நிலையத்துக்கு சென்ற மாணவிகள்: வெளியான புகைப்படம்! SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 2:29 pm
image

Advertisement

மாணவிகள் சிலர் மதுபான விற்பனை நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


ஆனால், குறித்த மாணவிகள் அங்கு ஏன்? சென்றனர் என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. சிலவேளைகளில் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றிருக்கலாம் என சிலர்கூறுகின்றனர். 


எனினும், பணத்தை மாற்ற ஏனைய கடைகளுக்கு மாணவிகள் செல்வார்களே தவிர, இவ்வாறான இடத்துக்குச் செல்வதற்கு வாய்ப்பே இல்லையென இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.


குறித்த புகைப்படம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடையொன்றுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சட்டவிரோதமான மதுபாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறியே, இருபாலாரும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.  


ஆகையால்,  தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களும், மாணவர்கள் தொடர்பில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை, அம்மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுபான விற்பனை நிலையத்துக்கு சென்ற மாணவிகள்: வெளியான புகைப்படம் SamugamMedia மாணவிகள் சிலர் மதுபான விற்பனை நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.ஆனால், குறித்த மாணவிகள் அங்கு ஏன் சென்றனர் என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. சிலவேளைகளில் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றிருக்கலாம் என சிலர்கூறுகின்றனர். எனினும், பணத்தை மாற்ற ஏனைய கடைகளுக்கு மாணவிகள் செல்வார்களே தவிர, இவ்வாறான இடத்துக்குச் செல்வதற்கு வாய்ப்பே இல்லையென இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.குறித்த புகைப்படம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடையொன்றுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சட்டவிரோதமான மதுபாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறியே, இருபாலாரும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.  ஆகையால்,  தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களும், மாணவர்கள் தொடர்பில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை, அம்மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement