‘என்ன வாழ விடுங்க ப்ளீஸ்’மீண்டும் வீதிக்கு வந்து கதறிய விஜயலக்ஷ்மி!

362

தமிழ் சினிமாவில் வலம்வருகின்ற நடிகைகள் எவ்வளவு புகழ்ச்சியின் சிகரத்தை தொட்டாலும், ஒரு சிலர் தொடந்தும் சர்ச்சையை ஏற்படுத்துபவர்களாகவே காணப்படுகின்றனர்.

அவ்வாறு டிகை விஜயலக்ஷ்மி, சீமானை குறித்து பல பிரச்சனைகளை தொடந்து வந்தார்.

தற்போது, ஹரி நாடாரை பஞ்சாயத்தில் இழுத்துவிட்டுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி.

நகைகளுடன் ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர் தான் ஹரி.

கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார்.

ஹரி நாடார் ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக காணப்படுகின்றார்.

அண்மையில் இவர் விமான நிலையம் சென்ற போது, வருமான வரித்துறையினர் வளைத்து பிடித்து நகைகள் குறித்து விசாரித்துள்ளனர்.

அதன்போது, 1 கோடியே 52 லட்ச ரூபாய்யை முன்கூட்டியே கட்டி மிரளவைத்தார் ஹரி நாடார் .

அதே போல தற்போது 2k அழகானது காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஹரி நாடார் பற்றி புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார் விஜயலக்ஷ்மி.

சென்னையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண் ஒன்றில் நடிகை விஜயலக்ஷ்மி தங்கியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தனது அப்பார்ட்மெண்ட்டிற்க்கு சென்றபோது அங்கே ஆண் நபர் ஒருவர் இவரது அறையில் குளித்து கொண்டு இருந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் கேட்டபோது, விஜயலட்சுமி மூன்று மாதங்கள் வாடகை தராததால் அவர் தங்கியிருந்த அறையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளார்கள்.

இதனால் ஆவேசம் அடைந்த விஜயலட்சுமி தன்னுடைய அறையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துவிட்டு உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது, தான் இந்த அபார்ட்மென்டில் தங்க வைத்ததாகவும் அவருக்கு தெரியாமலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்

மேலும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் தன்னுடைய பொருட்கள் எல்லாம் வெளியில் தூக்கிப் போட்டு உள்ளதாகவும் வாடகை தரவில்லை என்றால் தன்னை அடைத்து அல்லது தன்னை தங்க வைத்த ஹரி நாடரிடம் பேச வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: