• Mar 29 2024

தயவு செய்து சிறு தொழிலாளர்களை வாழ விடுங்கள் - கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் சி. சின்னமணி

harsha / Dec 4th 2022, 10:37 pm
image

Advertisement

தயவு செய்து சிறு தொழிலாளர்களை வாழ விடுங்கள் ,கடல் அட்டை பண்ணைகளை உடனடியாக அகற்றுங்கள் என மெலிஞ்சிமுனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் சி. சின்னமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபம் இன்னமும் மாறவில்லை.தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எமது நிலங்கள் இப்போது பறிபோகின்றன.அதே போன்று எமது கடலும் இப்போது பறிபோகிறது.கடல் அட்டை பண்ணை என்ற பெயரில் ,எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலர் அழிக்கின்றனர்.

அட்டை வளர்ப்பால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.இதனால் முதலாளி வர்க்கம் மட்டுமே நன்மை அடைகிறது.கடல் தொழில் அமைச்சர் ஊடாக தான் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.இது களப்புக் கடல்.வீச்சு வலை மூலம் தொழில் செய்ய முடியும்.ஆனால் இந்த நிலமை இப்போது மாறி வருகிறது.ஆகவே உடனடியாக இந்த அட்டை பண்ணைகள் அகற்றப்பட்டு,பிரதேச மக்களை தொழில் செய்து வாழ விட வேண்டும் என்றார்.

தயவு செய்து சிறு தொழிலாளர்களை வாழ விடுங்கள் - கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் சி. சின்னமணி தயவு செய்து சிறு தொழிலாளர்களை வாழ விடுங்கள் ,கடல் அட்டை பண்ணைகளை உடனடியாக அகற்றுங்கள் என மெலிஞ்சிமுனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் சி. சின்னமணி கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபம் இன்னமும் மாறவில்லை.தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எமது நிலங்கள் இப்போது பறிபோகின்றன.அதே போன்று எமது கடலும் இப்போது பறிபோகிறது.கடல் அட்டை பண்ணை என்ற பெயரில் ,எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலர் அழிக்கின்றனர்.அட்டை வளர்ப்பால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.இதனால் முதலாளி வர்க்கம் மட்டுமே நன்மை அடைகிறது.கடல் தொழில் அமைச்சர் ஊடாக தான் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.இது களப்புக் கடல்.வீச்சு வலை மூலம் தொழில் செய்ய முடியும்.ஆனால் இந்த நிலமை இப்போது மாறி வருகிறது.ஆகவே உடனடியாக இந்த அட்டை பண்ணைகள் அகற்றப்பட்டு,பிரதேச மக்களை தொழில் செய்து வாழ விட வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement