சித்ரா தற்கொலைக்கான காரணத்தை நீதிமன்றத்தில் அறிவித்த பொலிசார்!

747

சின்னத்திரை பிரபலமான சித்ரா உயிரிழந்து ஒரு மாதங்களை கடந்துள்ள போதும் அவர் பற்றிய தகவல்கள் வெளியாகியவாரே உள்ளன.

அவரின் உயிரிழப்பைத் தாண்டி ஏன் இப்படி செய்தார் என்பதில் பெரிய மர்மம் இருந்து வருகின்ற நிலையில் தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சாரிபில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2-ம் திகதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சித்ராவின் கணவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது நண்பரான ரோகித் என்பவர், ஜாமீக் கொடுக்க கூடாது என எதிர் தரப்பில் மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரபாகரனை கொன்றதில் மகிழ்ச்சி; பொளத்த மதத்திற்கு மாறி விகாரை கட்டும் முன்னாள் போராளி ..! 

இந்நிலையில் தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் ரோகித்துடன் சித்ராவின் மரணம் குறித்து பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆடியோவில், ”சித்ராவின் மரணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதற்கு காரணம் சித்ராவின் தாயார் கொடுத்த அழுத்தம்தான்” என அவர் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம்?- ரசிகர்கள் ஷாக்..!

மேலும் சித்ராவின் வழக்கு குறித்து விசாரித்தால், பொலிஸிடம் என்ன சொல்ல வேண்டும் என்றும் ஹேம்நாத் ரோகித்துக்கு அறிவுரைகள் வழங்குகிறார். அன்று இரவு ஹோட்டல் அறையில் என்ன நடந்தது, சித்ராவின் தலையில் ஏற்பட்ட காயம் எதனால் இருக்கக்கூடும் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஹேம்நாத் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: