• Sep 29 2024

மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், வேன்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..! samugammedia

Chithra / Oct 26th 2023, 2:41 pm
image

Advertisement


 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வான்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காவல் துணைக் கண்காணிப்பாளர்களிடம் ஆய்வு செய்தபோது, பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அது பாடசாலை சேவையாக மாற்றப்படுகிறது.

அதேவேளை, வான்களின் பராமரிப்பும் மிகவும் மோசமாக உள்ளது.இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், போக்குவரத்து காவல்துறையினருடன் ஆய்வு செய்தோம். அதன் பின் சிலருக்கு தடை உத்தரவு பிறப்பித்தோம், - என்றார். 


மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், வேன்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை. samugammedia  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வான்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.காவல் துணைக் கண்காணிப்பாளர்களிடம் ஆய்வு செய்தபோது, பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அது பாடசாலை சேவையாக மாற்றப்படுகிறது.அதேவேளை, வான்களின் பராமரிப்பும் மிகவும் மோசமாக உள்ளது.இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், போக்குவரத்து காவல்துறையினருடன் ஆய்வு செய்தோம். அதன் பின் சிலருக்கு தடை உத்தரவு பிறப்பித்தோம், - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement