• Dec 07 2023

சிறிய கூடாரங்களுக்குள் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட 24 ஜோடிகள்- பொலிஸார் எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Sep 24th 2023, 9:06 pm
image

Advertisement

ஹோமாகமவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு  சொந்தமான தோட்டத்தில், சிறிய ​அறைகளுக்குள் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்தனர் என ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சுற்றிவளைப்பின் போது, சிறிய அறைகளில் இருந்த 24 ஜோடிகள் இருந்தன. இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுது்து, அந்த ஜோடிகளை அழைத்து, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, ஆலோசனைகளை வழங்கியதன் பின்னர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை எடுத்துக்கூறி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



தங்கள் குழந்தைகளுடன் அந்த பூங்காவுக்கு செல்லும் போது, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதை ஒத்தவர்கள் அந்த தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையகளில், காம லீலைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மதத்தலைவர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் கட்டளையின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய கூடாரங்களுக்குள் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட 24 ஜோடிகள்- பொலிஸார் எச்சரிக்கை samugammedia ஹோமாகமவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு  சொந்தமான தோட்டத்தில், சிறிய ​அறைகளுக்குள் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்தனர் என ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.அந்த சுற்றிவளைப்பின் போது, சிறிய அறைகளில் இருந்த 24 ஜோடிகள் இருந்தன. இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுது்து, அந்த ஜோடிகளை அழைத்து, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, ஆலோசனைகளை வழங்கியதன் பின்னர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை எடுத்துக்கூறி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தங்கள் குழந்தைகளுடன் அந்த பூங்காவுக்கு செல்லும் போது, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதை ஒத்தவர்கள் அந்த தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையகளில், காம லீலைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மதத்தலைவர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் கட்டளையின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement