• Mar 29 2024

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பொங்கல் விழா!

Sharmi / Jan 28th 2023, 2:57 pm
image

Advertisement

யாழ். பல்கலைக்கழக வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாழின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன் பொழுது இன்று காலை 9 மணியளவில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வ பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் பஜனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

பின்னர் ஆலய முன்றலில் கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகளை தொடர்ந்து சிவபூமி மடத்தில்  கலை நிகழ்வுகள் இடம்பெற்று  தொடர்ச்சியாக பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றது .

இதன் பொழுது பிரதம விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவும் கௌரவ விருந்தினராக செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும், சிறப்பு விருந்தினர் ரில்கோ சிற்றி கொட்டல்  உரிமையாளர் திலகராஜ்யும் கலந்து கொண்டதோடு, நகுலேஸ்வர ஆலயத்தின் நகுலேஸ்வர குருக்களும் கலந்து கொண்டனர்.


யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பொங்கல் விழா யாழ். பல்கலைக்கழக வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாழின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.இதன் பொழுது இன்று காலை 9 மணியளவில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வ பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் பஜனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பின்னர் ஆலய முன்றலில் கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகளை தொடர்ந்து சிவபூமி மடத்தில்  கலை நிகழ்வுகள் இடம்பெற்று  தொடர்ச்சியாக பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றது .இதன் பொழுது பிரதம விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவும் கௌரவ விருந்தினராக செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும், சிறப்பு விருந்தினர் ரில்கோ சிற்றி கொட்டல்  உரிமையாளர் திலகராஜ்யும் கலந்து கொண்டதோடு, நகுலேஸ்வர ஆலயத்தின் நகுலேஸ்வர குருக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement