• Jan 30 2023

ஈழத்து கலைஞனின் எண்ணத்தில் உருவான 'ஃபைண்டர்' திரைப்படத்தின் பூஜை நிகழ்வு!

Sharmi / Nov 30th 2022, 11:15 pm
image

Advertisement

ஆரபி படைப்பகத்தின் முதல் தென்னிந்திய திரைப்படமாக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'.

இந்நிலையில் 'ஃபைண்டர்'  திரைப்படத்தின் பூஜை  நேற்றுமுன்தினம் (28) கனடா ரொறொன்ரோ வரசித்திவிநாயகர் ஆலயத்தில்  நடைபெற்றது.

'ஃபைண்டர்' திரைப்படத்தை பொறுத்தவரையில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதேவேளை அவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

சூர்ய பிரசாத் இசையமைக்கும் இப்படம் அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில் சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை"ஃபைண்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




ஈழத்து கலைஞனின் எண்ணத்தில் உருவான 'ஃபைண்டர்' திரைப்படத்தின் பூஜை நிகழ்வு ஆரபி படைப்பகத்தின் முதல் தென்னிந்திய திரைப்படமாக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'.இந்நிலையில் 'ஃபைண்டர்'  திரைப்படத்தின் பூஜை  நேற்றுமுன்தினம் (28) கனடா ரொறொன்ரோ வரசித்திவிநாயகர் ஆலயத்தில்  நடைபெற்றது.'ஃபைண்டர்' திரைப்படத்தை பொறுத்தவரையில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதேவேளை அவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.சூர்ய பிரசாத் இசையமைக்கும் இப்படம் அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில் சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.அதேவேளை"ஃபைண்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement