• Apr 19 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய தபால் வாக்கு சீட்டுகள் ஐந்து நாட்களுக்குள் வழங்கத் தயார் - அரச அச்சகர் அறிவிப்பு!SamugamMedia

Sharmi / Mar 10th 2023, 3:05 pm
image

Advertisement

தபால் வாக்கு சீட்டுகளை ஐந்து நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்கு சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியுமென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக அதற்கான நிதியை பெற்றுக்கொள்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் தேவையான தகவல்களை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்புமாறும், அதற்கமைய உரிய பாதுகாப்புக்களை வழங்க முடியுமென தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன், ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேர்தலுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை மாத்திரம் தேர்தல் தாமதமடையும் காலப்பகுதிக்குள் வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய தபால் வாக்கு சீட்டுகள் ஐந்து நாட்களுக்குள் வழங்கத் தயார் - அரச அச்சகர் அறிவிப்புSamugamMedia தபால் வாக்கு சீட்டுகளை ஐந்து நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்கு சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியுமென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக அதற்கான நிதியை பெற்றுக்கொள்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இதனிடையே, பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் தேவையான தகவல்களை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்புமாறும், அதற்கமைய உரிய பாதுகாப்புக்களை வழங்க முடியுமென தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேர்தலுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை மாத்திரம் தேர்தல் தாமதமடையும் காலப்பகுதிக்குள் வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement