• Mar 28 2024

திடீரென தீப்பிடித்து எரிந்த மகிழுந்து - தீக்கிரையான கர்ப்பிணி பெண்!

Tamil nila / Feb 3rd 2023, 7:01 pm
image

Advertisement

கேரள மாநிலத்தில் மகிழுந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பில் கேரள மாநிலத்தின் கண்ணூர் நகர காவல் ஆணையாளர் தெரிவிக்கையில், ''கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரிஜித் (35) மற்றும் அவரது நிறைமாத கர்ப்பிணியானா மனைவி ரீஷா (26) என்பவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிஜித் உறவினர்களுடன் அவரை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.


அப்போது மகிழுந்து தீப்பிடித்தவுடன் முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் தீ மகிழுந்து முழுவதும் பரவியதில் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.


பின்னால் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

திடீரென தீப்பிடித்து எரிந்த மகிழுந்து - தீக்கிரையான கர்ப்பிணி பெண் கேரள மாநிலத்தில் மகிழுந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் கேரள மாநிலத்தின் கண்ணூர் நகர காவல் ஆணையாளர் தெரிவிக்கையில், ''கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரிஜித் (35) மற்றும் அவரது நிறைமாத கர்ப்பிணியானா மனைவி ரீஷா (26) என்பவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிஜித் உறவினர்களுடன் அவரை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.அப்போது மகிழுந்து தீப்பிடித்தவுடன் முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் தீ மகிழுந்து முழுவதும் பரவியதில் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.பின்னால் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement