• Mar 29 2024

நாடாளுமன்றில் அரசின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ள ஜனாதிபதி!

Chithra / Jan 29th 2023, 10:42 am
image

Advertisement

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.

ஜனவரி 27ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

அத்தகைய குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் எனபதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் அரசின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ள ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.ஜனவரி 27ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.அத்தகைய குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் எனபதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement