• Sep 30 2024

அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிரடியாகக் குறைப்பு! SamugamMedia

Chithra / Mar 8th 2023, 4:02 pm
image

Advertisement

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ.50 முதல் 25 சதம் வரை குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.600 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி வரி 25 காசுகளாக குறைக்கப்பட்டதன் பின்னர் 25 சத வரியின் கீழ் 14 இலட்சம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 இலட்சம் மெற்றிக் தொன் பருப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த விற்பனையாளர்கள் மேலும் கூறுகின்றனர்.

இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலைகள் குறைவடைந்துள்ளமையின் பயனை இந்நாட்டு நுகர்வோர் பெற்றுக்கொள்ள வேண்டுமென வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிரடியாகக் குறைப்பு SamugamMedia ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ.50 முதல் 25 சதம் வரை குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.600 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி வரி 25 காசுகளாக குறைக்கப்பட்டதன் பின்னர் 25 சத வரியின் கீழ் 14 இலட்சம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 இலட்சம் மெற்றிக் தொன் பருப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த விற்பனையாளர்கள் மேலும் கூறுகின்றனர்.இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலைகள் குறைவடைந்துள்ளமையின் பயனை இந்நாட்டு நுகர்வோர் பெற்றுக்கொள்ள வேண்டுமென வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement