இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்

75

இந்தியாவில், தனியார் வைத்தியசாலைகள், கொரோனா தடுப்பூசிக்காக அறவிடக்கூடிய உச்சபட்ச விலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, கொவிஷீல்ட் ஒரு மாத்திரைக்கு 780 இந்திய ரூபாவும், ஸ்புட்னிக் ஏ ஒரு மாத்திரைக்கு ஆயிரத்து 145 இந்திய ரூபாவும், கொவெக்ஸின் ஒரு மாத்திரைக்கு ஆயிரத்து 410 இந்திய ரூபாவும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரிகளும், வைத்தியசாலைகளின் சேவைக் கட்டணமான 150 இந்திய ரூபாவும், இதில் அடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளின் சேவைக் கட்டணத்தை 150 இந்திய ரூபாவை விடவும் அதிகரிக்க இடமளிக்க வேண்டாம் என மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: