• Apr 25 2024

சுதந்திர தின நிகழ்வுகளில் பௌத்த மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை - எழுந்த எதிர்ப்பினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Chithra / Jan 25th 2023, 9:19 am
image

Advertisement

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக வடக்கு மாகாண சபை காரியாலயம் பௌத்த மயமாக்கப்படவுள்ளதாக  எழுந்த எதிர்பினால் வழிபாட்டு  இடம் மாற்றப்படுகின்றது. 

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் தனித்து பௌத்த மத வழிபாடுகள் மட்டும்  இரவு முழுவதும் இடம்பெற பிரதம செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டமை தெரியவந்தது.

நாடு முழுவதும் இடம்பெறும் சர்வ மத வழிபாட்டை வடக்கு மாகாண சபையால் சகல மத வழிபாடு என்னும் பெயரில் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தாலும் ஏனைய மதங்களிற்கான வழிபாடுகள் ஆலயங்களில் இடம்பெறவும்  பௌத்த வழிபாடு மட்டுமே கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக 2ஆம் திகதி இரவிரவாக மாகாண சபை அலுவலகத்தில் பிரித் ஓதி பௌத்த வழிபாட்டு ஏற்பாடுகள் இடம்பெறுவதோடு காலையில் பௌத்த துறவிகளிற்கு தானம் வழங்கவும்  பிரித் ஓத  யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து பௌத்த துறவுகளும்  அநுராதபுரத்தில் இருந்தும் ஒரு தொகுதி பௌத்த பிக்குமாரும்  அழைத்து வரப்படவிருந்தனர்.

இதன்போது  2ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அலுவலக உட்புற வெளிப்புறங்கள் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்படவுள்ளமை உட்பட அனைத்து நிகழ்விற்கும் அதிகாரிகள் சிலருடன் பல அரசியல் கட்சிஙளும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகி வந்தனர்.

இவற்றின் அடிப்படையில் நேற்றைய தினம் வடக்கு மாகாண பி்தம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு அமைய பௌத்த மத வழிபாடுகளும் வெளியில் ஓர் விகாரைக்கு மாற்ற முடிவாகியுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளில் பௌத்த மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை - எழுந்த எதிர்ப்பினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக வடக்கு மாகாண சபை காரியாலயம் பௌத்த மயமாக்கப்படவுள்ளதாக  எழுந்த எதிர்பினால் வழிபாட்டு  இடம் மாற்றப்படுகின்றது. இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் தனித்து பௌத்த மத வழிபாடுகள் மட்டும்  இரவு முழுவதும் இடம்பெற பிரதம செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டமை தெரியவந்தது.நாடு முழுவதும் இடம்பெறும் சர்வ மத வழிபாட்டை வடக்கு மாகாண சபையால் சகல மத வழிபாடு என்னும் பெயரில் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தாலும் ஏனைய மதங்களிற்கான வழிபாடுகள் ஆலயங்களில் இடம்பெறவும்  பௌத்த வழிபாடு மட்டுமே கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்காக 2ஆம் திகதி இரவிரவாக மாகாண சபை அலுவலகத்தில் பிரித் ஓதி பௌத்த வழிபாட்டு ஏற்பாடுகள் இடம்பெறுவதோடு காலையில் பௌத்த துறவிகளிற்கு தானம் வழங்கவும்  பிரித் ஓத  யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து பௌத்த துறவுகளும்  அநுராதபுரத்தில் இருந்தும் ஒரு தொகுதி பௌத்த பிக்குமாரும்  அழைத்து வரப்படவிருந்தனர்.இதன்போது  2ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அலுவலக உட்புற வெளிப்புறங்கள் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்படவுள்ளமை உட்பட அனைத்து நிகழ்விற்கும் அதிகாரிகள் சிலருடன் பல அரசியல் கட்சிஙளும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகி வந்தனர்.இவற்றின் அடிப்படையில் நேற்றைய தினம் வடக்கு மாகாண பி்தம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு அமைய பௌத்த மத வழிபாடுகளும் வெளியில் ஓர் விகாரைக்கு மாற்ற முடிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement