சாய்ந்தமருதில் பயன் தரும் பழமரங்களை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு) 

“கல்முனை மாநகரத்தை பசுமையாக்குவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பயன் தரும் பழமரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று (23.09.2022) சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் சமூகசேவையாளரும் கலைஞருமான ஏ.எல். அன்ஸார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது

மர்ஹும் அல்ஹாஜ்  ஏ.எஸ்.எம் சம்சுதீன் ஆலிம் கலை கலாசார ஊடக சமூக  மேம்பாட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் லக்ஸ்டோ மீடியா வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமத்தில் உள்ள பொது அமைப்புகள், மகளிர் சங்கங்கள் பொதுமக்கள் என 400 பேருக்கு மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நிகழ்வின் போது வொலிவேரியன் கிராமத்தில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணியை உரிய பயன்பாட்டுக்கு விடுவித்து தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்கு மகஜரும் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்களான எம்.எல்.ஏ.எம்.கையும், எம்.எஸ்.எம்.ஐ.மதனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை