பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டு

121

பேஸ்புக் நிறுவனத்தின் Instagram செயலி குறித்து, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமூக வலைத்தள செயலியான Instagram மூலம் சிறுவர்கள் குறித்த தரவுகள் கையாளப்படும் விதம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணைக்குழு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான தரவுக் கட்டுப்பாட்டு நிறுவனமாக  காணப்படுகிறது.

இந்த நிலையில், பாவனையாளர்களின் தரவுகளைக் கையாள்வதற்காக Instagram செயலி கொண்டுள்ள சட்டரீதியான உரித்து தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

18 வயதுக்குட்பட்ட Instagram பாவனையாளர்களின் தரவுகளை பகிரங்கப்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணைக்குழு குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.