• Dec 01 2022

அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

Tamil nila / 6 days ago
image

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா குரல் எழுப்பி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவிற்கு வடகொரிய அதிபரின் சகோதரி 'கிம் யோ ஜாங்' எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஏற்கனவே, அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு விமானப்படை பயிற்சியை மேற்கொண்டது.இதனை எதிர்க்கும் வகையில் வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தொடர்ச்சியாக ஏவி சோதனை செய்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


குறித்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் தென்கொரியாவும், ஜப்பானும் இணைந்து வடகொரிக்கு எதிராக நிற்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தற்போது அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.