• Sep 30 2024

புங்குடுதீவு வாணர் பாலத்தில் உழவு இயந்திரமொன்று சரிந்து வீழ்ந்து விபத்து! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 1:55 pm
image

Advertisement

புங்குடுதீவு வாணர்  பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து போனமையினாலேயே இவ்வாறு விபத்து இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது . புங்குடுதீவு மக்களின் நிதியில்  அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர்  நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால்  கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்துவருகின்றனர் . புங்குடுதீவு, நயினாதீவு ,  நெடுந்தீவுக்கு இப்பாலத்தினூடாகவே ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர் .



நீண்டகாலமாக இலங்கையின் நீளமான கடற்பாதையாக இதுவே காணப்படுகின்றது . மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இப்பாலத்தினை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . ஆனாலும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்நிதி ஒதுக்கீடு மீளப்பெறப்பட்டு புனரமைப்பு பணி திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டது . முப்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சராக குப்பை கொட்டுகின்ற டக்ளஸ் தேவானந்த  இதுகுறித்து எதுவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை . தீவக மக்களின் வாக்குகளால் 1994 ல் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கியவரே  இந்த டக்ளஸ் தேவானந்த என்பது குறிப்பிடத்தக்கது. 

புங்குடுதீவு வாணர் பாலத்தில் உழவு இயந்திரமொன்று சரிந்து வீழ்ந்து விபத்து samugammedia புங்குடுதீவு வாணர்  பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து போனமையினாலேயே இவ்வாறு விபத்து இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில்  இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது . புங்குடுதீவு மக்களின் நிதியில்  அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர்  நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால்  கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்துவருகின்றனர் . புங்குடுதீவு, நயினாதீவு ,  நெடுந்தீவுக்கு இப்பாலத்தினூடாகவே ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர் .நீண்டகாலமாக இலங்கையின் நீளமான கடற்பாதையாக இதுவே காணப்படுகின்றது . மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இப்பாலத்தினை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . ஆனாலும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்நிதி ஒதுக்கீடு மீளப்பெறப்பட்டு புனரமைப்பு பணி திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டது . முப்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சராக குப்பை கொட்டுகின்ற டக்ளஸ் தேவானந்த  இதுகுறித்து எதுவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை . தீவக மக்களின் வாக்குகளால் 1994 ல் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கியவரே  இந்த டக்ளஸ் தேவானந்த என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement