தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருக்கும் புடின்: முன்னாள் பிரதமர் கருத்து!

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும்இராணுவ நடவடிக்கை இரண்டு மாதங்கள் கடந்தும் தொடர்கின்றது.

இதேவேளை உக்ரைனுக்கெதிரான ஆக்கிரமிப்பு போரினை முன்னடுத்து வரும் ரஷ்யா பல வழிகளில் தனது இழப்பினை சந்தித்து வருவதாகவும் ரஷ்யாவின் அதிபர் புடின் தன்னம்பிக்கையை சிறிது சிறிதாக இழந்து வருவதாகவும் ரஷ்யாவின் முன்னாள் பிரதமரும் புடினின் முதலாவது அதிபர் நிலை தலைமையில் பிரதமராக பதவி வகித்தவருமான மிகைல் கஸ்யனோவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தனிப்பட்ட பேட்டியின் போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மிகைல் கஸ்யனோவ், போர் ஆரம்பித்த நாட்களில் காணப்பட்ட புடினின் மனநிலைக்கும் தற்போது காணப்படும் புடினின் மனநிலைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் தோன்றுவதாகவும், புடின் மனதளவில் உக்ரைனிடம் தோற்று விட்டார் என்றும் குறிப்பட்ட பிரதமர், புடின் ரஷ்ய இராணுவத்தை தவறான பாதையில் வழிநடாத்தி செல்வதை அவதானிக்க முடிகின்றது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் உக்ரைனை “நியோ- நாசிக்” எனவும் அணு ஆயுத நாடு எனவும் குற்றம் சாட்டி போரை தொடங்கிய புடின் தற்போது அதனை முடிக்க முடியாது அவதியுறுகின்ற நிலை காணப்படுகின்றது.

அத்துடன் தற்போதைய புடினின் பேச்சுக்கள் முறையற்ற விதமாக வெளிவருகின்றன எனவும் இவ்வாறான செயற்பாடுகள் புடின் உக்ரைன் பிரச்சனையில் தன்னம்பிக்கையை இழந்து வருகின்றமையை தெளிவாக காட்டுவதாக முன்னாள் பிதரமர் மேற்படி பேட்டியின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை