ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்ததில் இருந்து குறித்த நகரம் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.
மேலும் கிரிமியா பயணத்தை முடித்து ஒருநாள் கழித்து மரியுபோலுக்கு புடின் திடீரென பயணித்துள்ளார்.
உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு புடினின் இரண்டாவது அறிவிக்கப்படாத பயணம் இதுவாகும்.
கடந்த ஆண்டு , ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு ஆலையின் தாயகமான மரியுபோலில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ரஷ்யா செலுத்தியது.
மேலும் ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் தங்கியிருந்த குறித்த நகரத்தின் மீது கண்மூடித்தனமாக குண்டு வீசியது.
உக்ரைன் இராணுவமானது இறுதியில் நகரின் எஃகு தொழிற்சாலையில் தஞ்சம் புகுந்தது.
இறுதியாக, உக்ரைனின் படைகள் பின்வாங்கி, பேரழிவிற்குள்ளான மரியாபோல் நகரத்தை ரஷ்ய கட்டுப்பாட்டில் விட்டன.
உள்நாட்டு தகவல்களின் படி நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக,புடின் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
திடீரென உக்ரைனின் பிரதான நகருக்கு விஜயம் செய்த புடின் SamugamMedia ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்ததில் இருந்து குறித்த நகரம் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.மேலும் கிரிமியா பயணத்தை முடித்து ஒருநாள் கழித்து மரியுபோலுக்கு புடின் திடீரென பயணித்துள்ளார்.உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு புடினின் இரண்டாவது அறிவிக்கப்படாத பயணம் இதுவாகும்.கடந்த ஆண்டு , ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு ஆலையின் தாயகமான மரியுபோலில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ரஷ்யா செலுத்தியது.மேலும் ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் தங்கியிருந்த குறித்த நகரத்தின் மீது கண்மூடித்தனமாக குண்டு வீசியது.உக்ரைன் இராணுவமானது இறுதியில் நகரின் எஃகு தொழிற்சாலையில் தஞ்சம் புகுந்தது.இறுதியாக, உக்ரைனின் படைகள் பின்வாங்கி, பேரழிவிற்குள்ளான மரியாபோல் நகரத்தை ரஷ்ய கட்டுப்பாட்டில் விட்டன.உள்நாட்டு தகவல்களின் படி நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக,புடின் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.