• Apr 24 2024

புடினுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் : விடிய விடிய தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 7:00 pm
image

Advertisement

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்படி நேற்றிரவு முழுவதும் உக்ரைன் மீது 16 ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. அவற்றில் 11   மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

உக்ரைனின் எல்லையை ஒட்டிய அசோவ் கடல் மற்றும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 34 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஒரு ஏவுகணை தாக்குதல், 57 விமான எதிர்ப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 

 

புடினுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் : விடிய விடிய தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா SamugamMedia சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி நேற்றிரவு முழுவதும் உக்ரைன் மீது 16 ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. அவற்றில் 11   மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லையை ஒட்டிய அசோவ் கடல் மற்றும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஒரு ஏவுகணை தாக்குதல், 57 விமான எதிர்ப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement