• Apr 24 2024

கலப்புக்கு நாள் குறித்த ரணில்: ஏற்பாடுகளும் அமோகம்!

Sharmi / Dec 3rd 2022, 11:17 am
image

Advertisement

நாட்டில் கடந்த பல வருடங்களாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் செயற்பாட்டில் தற்போதைய ரணில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு வருமாறு தமிழ் கட்சிகளுக்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.


இதனையடுத்து தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இது தொடர்பில் பல்வேறு சந்திப்புக்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் என்பன தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ம் திகதி நடைபெறும் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குறித்த பேச்சுவார்த்தையில் எடுத்துக்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அரச தரப்பினர் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த வரவு செலவுத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் இதன் ஓர் அங்கமாக இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தையும் தற்போது தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கலப்புக்கு நாள் குறித்த ரணில்: ஏற்பாடுகளும் அமோகம் நாட்டில் கடந்த பல வருடங்களாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் செயற்பாட்டில் தற்போதைய ரணில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு வருமாறு தமிழ் கட்சிகளுக்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.இதனையடுத்து தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இது தொடர்பில் பல்வேறு சந்திப்புக்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் என்பன தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ம் திகதி நடைபெறும் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை குறித்த பேச்சுவார்த்தையில் எடுத்துக்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அரச தரப்பினர் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.இந்நிலையில் குறித்த வரவு செலவுத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் இதன் ஓர் அங்கமாக இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தையும் தற்போது தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement