• Apr 23 2024

ரணில் ஐயா உங்களுடைய ஆயுள் காலம் இன்னும் இரு மாதங்கள் மட்டுமே..! ஜே.வி.பி சூளுரை

Chithra / Jan 17th 2023, 7:00 pm
image

Advertisement

சுதந்திரமடைந்து 75 வருடங்களாகும் நிலையில் ஒவ்வொரு ஆட்சியாளர்களும்  தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கின்றேன் என்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றீர்கள். அதிலும் விசேடமாக ரணில் விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சியானது தமிழ் மக்களின் தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற பல்வேறு கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்தெரிவித்தார்.

யாழில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில் களத்திலே நரிகள், யானைகள் மற்றும் பூனைகள் எனப் பலர் புகுந்து விளையாடுகின்ற விளையாட்டுக்களை மக்களால் காண முடிகின்றது. 

அந்த வகையில், எமது நாட்டு மக்களுக்கு வஞ்சகத்தனம் செய்வதில் முன்னணி வகிக்கின்ற நாட்டின்  ஜனாதிபதி அண்மையில்  பொங்கல் விழா என்று கூறி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ்ப்பாண மக்களை மீண்டும் ஏமாற்றுகின்ற தனது சித்து விளையாட்டுக்களை காட்டியிருக்கின்றார்.

இந்த ரணில் விக்கிரமசிங்க இன்னும் இரண்டு வருடங்களில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் அல்லது மாகாண சபை முறையை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன், 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் எனக் கூறுகின்றார்.

ரணில் ஐயா அவர்களே.. உங்களுடைய ஆயுள் காவம்  இரு மாதங்களுக்காவது தொடருமோ என்று தெரியாது. ஏனென்றால் இப்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  

இந்தத் தேர்தலிலே படுதோல்வியடைவது உறுதி. அதன் காரணமாக உங்களது சகாக்களான ராஜபக்சாக்களும் இருந்த இடமே தெரியாமல் போவது உறுதி என்ற நிலை எல்லோருக்குமே நன்றாகத் தெரிகின்றது.  

முழு நாட்டு மக்களுமே ரணில் ராஜபக்சாக்களை எப்போது விரட்டியடிப்பது என்று காத்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.  

அந்த போராட்டத்தின் விளைவாக கோட்டபாய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார். அதே போல் ராஜபக்ச குடும்பத்தினர் தங்களுடைய பதவிகளை விட்டுவிட்டு ஒழிந்து மறைந்து வாழவேண்டிய நிலை காணப்பட்டது.  

அந்த நிலைமையின் பிறகு நரித் தந்திரங்களைக் கையாண்டு நீங்கள் ஜனாதிபதியாக வந்திருக்கிறீர்கள்.  நான் யானையைத் தருகின்றேன், பூனையைத் தருகின்றேன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கின்றேன், பொருளாதாரப் பிர்ச்சினையைத் தீர்க்கின்றேன் என நீங்கள் ஜனாதிபதியாகும் போது கூறியிருந்தீர்கள்.  

நீங்கள் கூறிய வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக மக்களும், நாடும்  பொருளாதார ரீதியில் படுபாதாளத்திற்கு சீரழிந்து போயிருக்கின்றது. 

அது மாத்திரமல்ல  நாட்டிலுள்ள அனைத்து வளங்களையும் வெளிநாட்டுக்குத் தாரைவார்க்கின்ற நபராக இன்று நீங்கள் மாறியுள்ளீர்கள்.

மக்கள் மீது வரிகளை சுமத்தி வாட்டி வதைக்கின்ற நபராக நீங்கள் இன்று மாறியுள்ளீர்கள்.  அதேபோல் தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்று நேற்று தோன்றியதல்ல. விசேடமாக இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே ஆரம்பமான பிரச்சினையாகும்.  

சுதந்திரமடைந்து 75 வருடங்களாகும் நிலையில் ஒவ்வொரு ஆட்சியாளர்களும்  தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கின்றேன் என்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்றீர்கள். 

நீங்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றீர்கள். 

அதிலும் விசேடமாக ரணில் விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சியானது தமிழ் மக்களின் தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற பல்வேறு கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

அவ்வாறான நிலையிலே தற்போது தமிழ் மக்களுடைய காணிப்பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றன தீர்க்கப்படாமல் இருக்கும் போது  நீங்கள் இங்கு வந்து தமிழருக்குத் தண்ணீர் காட்டுகின்ற, தமிழர் அரசியல் கட்சிகளுக்கு எண்ணெய் தடவுகின்ற செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். 

ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றானது வெறும் வெற்று கூற்று. இவரால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு  எவ்விதமான தீர்வையும் காண முடியாது. அதே போல் விசேடமாக தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையால் யுத்தம் ஏற்பட்டு அதன் மூலம் பல உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது. யாருமல்ல  ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியே ஆகும். 

எதிர்வரும் தேர்தலில் தம்மை தக்க வைத்துக்கொள்ளவும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதற்காகவும் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக அதனைக் கையிலெடுத்துள்ளார். 

இது மீண்டும் தமிழ் மக்களைப் படுபாதாளத்தில் தள்ளுகின்ற நடவடிக்கையே தவிர வேறெதுவும் கிடையாது.  அதனால் ரணில் விக்கிரமசிங்கவின் சித்து விளையாட்டுகளுக்குள்  பலிக்கடாக்களாக்க வேண்டாமென  தமிழ் மக்களிடமும் தமிழ்க் கட்சிகளிடமும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.  

அதேபோல் முழுத் தென்னிலங்கையும் ரணில் விக்மிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப அணி திரண்டிருக்கின்றது.  ரணிலை வீட்டுக்கனுப்பிவிட்டு புதியதொரு பயணத்தை மேற்கொள்ள முழு மக்களும்  தயாராகி உள்ளனர்.  

அந்த மாற்றத்தினூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுண்டு என நாங்கள் திடமாக நம்புகின்றோம்.  அந்த வகையில் விசேடமாக 75 வருடங்களாக நிலவும் சாபக்கேட்டிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எதிர்வரும் தேர்தலிலே மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி  களத்தில் இறங்கியுள்ளது. 

அதை்து மாகாணங்களிலும் போட்டியிடுகின்றது. 75 வருட சாபக்கேட்டிலிருந்து மீள்வதற்கும், தமிழ் மக்களுக்கு நீண்டு நிலைக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும், தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்படுகின்ற அரசியலமைப்பை  கொண்டுவருவதற்கும், அதன் மூலமாக நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் தேசிய மக்கள் சக்தியின் சின்னமான திசை காட்டிக்கு வாக்களித்து எம்மைப் பலப்படுத்துமாறு  வட மாகாணத்திலுள்ள தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

இது உங்களுக்கான கோரிக்கையோ எங்களுக்கான கோரிக்கையோ இல்லை, எதிர்காலப் பிள்ளைகளுக்கான கோரிக்கை, ஆகவே 75 வருட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எம்மைப் பலப்படு்த்துங்கள்.- என்றார்

ரணில் ஐயா உங்களுடைய ஆயுள் காலம் இன்னும் இரு மாதங்கள் மட்டுமே. ஜே.வி.பி சூளுரை சுதந்திரமடைந்து 75 வருடங்களாகும் நிலையில் ஒவ்வொரு ஆட்சியாளர்களும்  தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கின்றேன் என்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றீர்கள். அதிலும் விசேடமாக ரணில் விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சியானது தமிழ் மக்களின் தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற பல்வேறு கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்தெரிவித்தார்.யாழில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில் களத்திலே நரிகள், யானைகள் மற்றும் பூனைகள் எனப் பலர் புகுந்து விளையாடுகின்ற விளையாட்டுக்களை மக்களால் காண முடிகின்றது. அந்த வகையில், எமது நாட்டு மக்களுக்கு வஞ்சகத்தனம் செய்வதில் முன்னணி வகிக்கின்ற நாட்டின்  ஜனாதிபதி அண்மையில்  பொங்கல் விழா என்று கூறி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ்ப்பாண மக்களை மீண்டும் ஏமாற்றுகின்ற தனது சித்து விளையாட்டுக்களை காட்டியிருக்கின்றார்.இந்த ரணில் விக்கிரமசிங்க இன்னும் இரண்டு வருடங்களில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் அல்லது மாகாண சபை முறையை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன், 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் எனக் கூறுகின்றார்.ரணில் ஐயா அவர்களே. உங்களுடைய ஆயுள் காவம்  இரு மாதங்களுக்காவது தொடருமோ என்று தெரியாது. ஏனென்றால் இப்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  இந்தத் தேர்தலிலே படுதோல்வியடைவது உறுதி. அதன் காரணமாக உங்களது சகாக்களான ராஜபக்சாக்களும் இருந்த இடமே தெரியாமல் போவது உறுதி என்ற நிலை எல்லோருக்குமே நன்றாகத் தெரிகின்றது.  முழு நாட்டு மக்களுமே ரணில் ராஜபக்சாக்களை எப்போது விரட்டியடிப்பது என்று காத்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.  அந்த போராட்டத்தின் விளைவாக கோட்டபாய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார். அதே போல் ராஜபக்ச குடும்பத்தினர் தங்களுடைய பதவிகளை விட்டுவிட்டு ஒழிந்து மறைந்து வாழவேண்டிய நிலை காணப்பட்டது.  அந்த நிலைமையின் பிறகு நரித் தந்திரங்களைக் கையாண்டு நீங்கள் ஜனாதிபதியாக வந்திருக்கிறீர்கள்.  நான் யானையைத் தருகின்றேன், பூனையைத் தருகின்றேன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கின்றேன், பொருளாதாரப் பிர்ச்சினையைத் தீர்க்கின்றேன் என நீங்கள் ஜனாதிபதியாகும் போது கூறியிருந்தீர்கள்.  நீங்கள் கூறிய வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக மக்களும், நாடும்  பொருளாதார ரீதியில் படுபாதாளத்திற்கு சீரழிந்து போயிருக்கின்றது. அது மாத்திரமல்ல  நாட்டிலுள்ள அனைத்து வளங்களையும் வெளிநாட்டுக்குத் தாரைவார்க்கின்ற நபராக இன்று நீங்கள் மாறியுள்ளீர்கள்.மக்கள் மீது வரிகளை சுமத்தி வாட்டி வதைக்கின்ற நபராக நீங்கள் இன்று மாறியுள்ளீர்கள்.  அதேபோல் தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்று நேற்று தோன்றியதல்ல. விசேடமாக இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே ஆரம்பமான பிரச்சினையாகும்.  சுதந்திரமடைந்து 75 வருடங்களாகும் நிலையில் ஒவ்வொரு ஆட்சியாளர்களும்  தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கின்றேன் என்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றீர்கள். அதிலும் விசேடமாக ரணில் விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சியானது தமிழ் மக்களின் தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற பல்வேறு கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறான நிலையிலே தற்போது தமிழ் மக்களுடைய காணிப்பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றன தீர்க்கப்படாமல் இருக்கும் போது  நீங்கள் இங்கு வந்து தமிழருக்குத் தண்ணீர் காட்டுகின்ற, தமிழர் அரசியல் கட்சிகளுக்கு எண்ணெய் தடவுகின்ற செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றானது வெறும் வெற்று கூற்று. இவரால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு  எவ்விதமான தீர்வையும் காண முடியாது. அதே போல் விசேடமாக தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையால் யுத்தம் ஏற்பட்டு அதன் மூலம் பல உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது. யாருமல்ல  ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியே ஆகும். எதிர்வரும் தேர்தலில் தம்மை தக்க வைத்துக்கொள்ளவும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதற்காகவும் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக அதனைக் கையிலெடுத்துள்ளார். இது மீண்டும் தமிழ் மக்களைப் படுபாதாளத்தில் தள்ளுகின்ற நடவடிக்கையே தவிர வேறெதுவும் கிடையாது.  அதனால் ரணில் விக்கிரமசிங்கவின் சித்து விளையாட்டுகளுக்குள்  பலிக்கடாக்களாக்க வேண்டாமென  தமிழ் மக்களிடமும் தமிழ்க் கட்சிகளிடமும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.  அதேபோல் முழுத் தென்னிலங்கையும் ரணில் விக்மிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப அணி திரண்டிருக்கின்றது.  ரணிலை வீட்டுக்கனுப்பிவிட்டு புதியதொரு பயணத்தை மேற்கொள்ள முழு மக்களும்  தயாராகி உள்ளனர்.  அந்த மாற்றத்தினூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுண்டு என நாங்கள் திடமாக நம்புகின்றோம்.  அந்த வகையில் விசேடமாக 75 வருடங்களாக நிலவும் சாபக்கேட்டிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எதிர்வரும் தேர்தலிலே மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி  களத்தில் இறங்கியுள்ளது. அதை்து மாகாணங்களிலும் போட்டியிடுகின்றது. 75 வருட சாபக்கேட்டிலிருந்து மீள்வதற்கும், தமிழ் மக்களுக்கு நீண்டு நிலைக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும், தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்படுகின்ற அரசியலமைப்பை  கொண்டுவருவதற்கும், அதன் மூலமாக நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் தேசிய மக்கள் சக்தியின் சின்னமான திசை காட்டிக்கு வாக்களித்து எம்மைப் பலப்படுத்துமாறு  வட மாகாணத்திலுள்ள தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இது உங்களுக்கான கோரிக்கையோ எங்களுக்கான கோரிக்கையோ இல்லை, எதிர்காலப் பிள்ளைகளுக்கான கோரிக்கை, ஆகவே 75 வருட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எம்மைப் பலப்படு்த்துங்கள்.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement