ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்–திலிப் வெத ஆராய்ச்சி

157

கொலை குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று ரஞ்சன் ராமநாயக்கவும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று திலிப் வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சையொன்றுக்காக தங்கல்ல ஆதார வைத்தியசாலைக்கு இன்று (24) அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பார்வையிடுவதற்கு வைத்தியசாலைக்கு வந்தபோதே திலிப் வெதஆராய்ச்சி எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, வைத்தியசாலையில் சுமார் ஒரு மணித்தியாலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பின்னர் அவர் சிறைச்சாலைக்கு மீண்டும் இந்நிலையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த திலிப் வெதஆராய்ச்சி எம்.பி, மரணத்தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதை போன்று முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேம்லால் ஜயசேகர எம்.பிக்கு சிறைச்சாலைக்குள் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், நோய்வாய்ப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உறங்குவதற்கு பாய் படுக்கையே வழங்கப்படுகின்றது என்றார்.