தளபதி 66 ஷூட்டிங் குறித்து ராஷ்மிகா மந்தனா போட்ட முக்கிய பதிவு-செம சந்தோஷமாக இருக்குமாம்

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்து உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் கூட சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தளபதி 66 திரைப்படம் ஒரு பக்காவான குடும்ப திரைப்படமாக இருக்கும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தளபதி 66 ஷூட்டிங் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.

அதில் கூறியதாவது “நான் ரெடி ஆன பிறகு அழைப்பு வந்தவுடன் செட்டிற்கு சென்றுவிடுவேன். அங்கு விஜய் சார், வம்சி சார், யோகி பாபு சார் மற்றும் படக்குழுவை சந்தித்தேன். அவர்களுடன் ரொம்ப நேரத்தை கழிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். இவர் கூறிய இந்த விடயம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை