வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

219

கேகாலை மாவட்டம், வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்து வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவரை கடந்த 10 ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துளள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: