தண்ணீர் பஞ்சம் காரணமாக சீனாவிற்கு சிகப்பு எச்சரிக்கை!

குறிப்பாக, சீனாவின் மத்திய மாகாணமான ஜியாங்க்சியில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நீர் மூலமான யங்க்சி நதி வெப்பம் காரணமாக வற்றி வருவதால் இந்த அபாயம் இனங்காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் அறிவித்துள்ள யங்க்சி மாகாண சபை குறிப்பிடும் போது, யங்க்சி நதிக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்றான payong lake இன் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருவதாகக் கூறியுள்ளது.

மேலும், இது கடந்த மூன்று மாதங்களில் 19.43m இலிருந்து 7.1m அளவிற்கு வற்றியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அத்தோடு மொத்தம் 267 நீர் அவதானிப்பு மையங்களில் அதிகூடிய வெப்பத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் விளைச்சலும் பெருமளவு பாதிப்படையும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை எதிர்வரும் நாட்களில் மேலும் மோசமடையும் எனவும் வெப்பநிலை உயர்வடையும் எனவும் வானிலை அவதானிப்பு மையங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை