வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் தைப்பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த படத்திற்கு அதிகம் தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கின்றது. மேலும் வெளியிடும் திகதியும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால் தற்போது பல உறுதிப்படுத்தாத தகவல்கள் உலா வருகின்றன.
துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி வெளியாகும். ஆனால், வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் திகதி அல்லது 13ம் திகதி வெளியிடலாம் என பிரபலம் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.
குறித்த இரண்டு படங்களுக்கும், சம அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என அவர் கூறி இருக்கின் றார். நன்றாக இருக்கும் படம் தான் நல்ல வசூல் ஈட்ட போகிறது, வெளியாகும் முன்னரா, பின்னரா என்பது பிரச்சனை இல்லை எனவும் அவர் கூறி இருக்கின்றார்.
ஏற்கனவே அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கின்றது.
தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையை மூன்று முக்கிய ஏரியாக்களில் உதயநிதி வாங்கி இருக்கிறாராம். சிட்டி, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் செய்கிறது என திருப்பூர் சுப்ரமணியன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தின் மூன்று முக்கிய ஏரியாக்களை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் தைப்பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த படத்திற்கு அதிகம் தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கின்றது. மேலும் வெளியிடும் திகதியும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால் தற்போது பல உறுதிப்படுத்தாத தகவல்கள் உலா வருகின்றன.துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி வெளியாகும். ஆனால், வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் திகதி அல்லது 13ம் திகதி வெளியிடலாம் என பிரபலம் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.குறித்த இரண்டு படங்களுக்கும், சம அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என அவர் கூறி இருக்கின் றார். நன்றாக இருக்கும் படம் தான் நல்ல வசூல் ஈட்ட போகிறது, வெளியாகும் முன்னரா, பின்னரா என்பது பிரச்சனை இல்லை எனவும் அவர் கூறி இருக்கின்றார்.ஏற்கனவே அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கின்றது.தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையை மூன்று முக்கிய ஏரியாக்களில் உதயநிதி வாங்கி இருக்கிறாராம். சிட்டி, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் செய்கிறது என திருப்பூர் சுப்ரமணியன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.