• Sep 29 2024

மண்ணெண்ணெய் விலை குறைப்பு; மீன் விலை குறையுமா? SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 12:55 pm
image

Advertisement

பேலியகொட மீன் சந்தையில் மீன் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை நேற்று தெரிவித்துள்ளது.

நேற்று மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைத்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை குறைப்பு உண்மையில் அனைத்து மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி இழுவை உரிமையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

தாங்க முடியாத எரிபொருள் விலை குறிப்பாக டீசல் விலை காரணமாக பெருமளவான மீனவர்கள் மீன்பிடித்தலை நிறுத்தியுள்ளதால் பேலியகொடை பிரதான மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது வேகமாக உயர்ந்துள்ளதாக மத்திய மீன் சந்தையின் தலைவர் ஜெயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்புடன் பல வழக்கமான மீனவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்றும், இந்த நிலைமை பிரதான மீன் சந்தையில் மீன் கடை உரிமையாளர்களுக்கு மீன் விலையைக் குறைக்க உதவும் என்றும், இந்த விலைக் குறைப்பு அடுத்த சில நாட்களில் வெளிமாவட்ட மீன் கடை உரிமையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றார்.

தற்போது நடைமுறையிலுள்ள டீசல் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் உடனடியாக தளர்த்தினால் அது நாடு தழுவிய மீனவ சமூகங்களுக்கும் உதவியாக இருக்கும். 


இந்த தருணத்திலும் மண்ணெண்ணெய் விலை உயர்வினால் நாடு முழுவதிலும் உள்ள பல மீனவ குடும்பங்கள் குறிப்பாக இரவு வேளைகளில் மீன்பிடிப்பதில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அது நுகர்வோர், ஹோட்டல் வியாபாரிகள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் என இருபாலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,மண்ணெண்ணெய் விலையை குறைத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் விலை குறைப்பு; மீன் விலை குறையுமா SamugamMedia பேலியகொட மீன் சந்தையில் மீன் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை நேற்று தெரிவித்துள்ளது.நேற்று மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைத்துள்ளது.மண்ணெண்ணெய் விலை குறைப்பு உண்மையில் அனைத்து மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி இழுவை உரிமையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.தாங்க முடியாத எரிபொருள் விலை குறிப்பாக டீசல் விலை காரணமாக பெருமளவான மீனவர்கள் மீன்பிடித்தலை நிறுத்தியுள்ளதால் பேலியகொடை பிரதான மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது வேகமாக உயர்ந்துள்ளதாக மத்திய மீன் சந்தையின் தலைவர் ஜெயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.இந்த விலைக் குறைப்புடன் பல வழக்கமான மீனவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்றும், இந்த நிலைமை பிரதான மீன் சந்தையில் மீன் கடை உரிமையாளர்களுக்கு மீன் விலையைக் குறைக்க உதவும் என்றும், இந்த விலைக் குறைப்பு அடுத்த சில நாட்களில் வெளிமாவட்ட மீன் கடை உரிமையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றார்.தற்போது நடைமுறையிலுள்ள டீசல் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் உடனடியாக தளர்த்தினால் அது நாடு தழுவிய மீனவ சமூகங்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த தருணத்திலும் மண்ணெண்ணெய் விலை உயர்வினால் நாடு முழுவதிலும் உள்ள பல மீனவ குடும்பங்கள் குறிப்பாக இரவு வேளைகளில் மீன்பிடிப்பதில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அது நுகர்வோர், ஹோட்டல் வியாபாரிகள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் என இருபாலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,மண்ணெண்ணெய் விலையை குறைத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement