Tuesday, June 28, 2022

மாரிபோலில் உள்ள உக்ரைன் படைகளை மீட்கும் பணிகள் ஆரம்பம்-மூத்த அதிகாரி கருத்து!

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை இரண்டு மாதங்களை கடந்த நிலையிலும் தொடர்கிறது.

இந் நிலையில் உக்ரைன் பிரதான துறைமுகமான மாரிபோலில் இருந்து உக்ரைன் படைகள் பின்வாங்கி சென்றுள்ள நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள மீதமுள்ள உக்ரைன் படையினரை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக உக்ரைன் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


உக்ரைன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது,

ரஷ்ய படைகளிடம் சிக்கியுள்ள உக்ரைன் இராணுவத்தினரை மீட்பது என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

சமாதான ஒப்புரவின் மூலம் மீட்க முடியாத நிலை தற்போது காணப்படுகின்றது.
இதன் போது அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் படி,

ஐக்கிய நாடுகள் சபையிடமும் மற்றும் செஞ்சிலுவை சங்கத்திடமும் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எமது படைகளை பாதுகாப்புடன் மீட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த திங்கட்கிழமை காயமடைந்த படையினர் உட்பட 264 இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று 7 பேருந்துகள் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒலெனிவ்கா என்ற கிராமத்துக்கு அவர்கள் வந்தடைந்ததாக கூறப்படுகிறது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:


RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை