மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம்

319

கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வருமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வரும்.

அத்துடன் இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: