அதிக விலைக்கு அரிசி-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை தனி உரிமையாளராக இருந்தால் ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை