பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ரொஷான் மஹாநாமவே தகுதியானவர்

266

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு சர்வதேச கிரிக்கட் பேரவையின் போட்டி மத்தியஸ்த்தர் ரொஷான் மஹாநாமவே தகுதியானவர் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான ரவி சாஸ்த்திரியை போன்று ரொஷான் மஹாநாமவிற்கும் செயற்படமுடியும்.

அத்துடன் ஒழுக்க விதிகளை சிறந்த முறையில் கடைபிடிக்கும் வீரர்கள் பட்டியலில் ரொஷான் மஹாநாம முன்னிலை பெறுவதாகவும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.