• Sep 30 2024

உக்ரைன் நகரங்களைச் சிதைக்கும் ரஷ்யாவின் வான்வெளித் தாக்குதல்: பதற்றத்தில் மக்கள்! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 3:25 pm
image

Advertisement

ரஷ்யா உக்ரைன் முழுவதும் வான்வெளி தாக்குதலை நடத்தியதால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் சிதைந்து பெரிய அளவு இழப்புகளை சந்தித்துள்ளன. அந்நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.



ரஷ்யா உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியதில், உக்ரைனின் வடக்கு பகுதியான கார்கிங் முதல் தெற்கில் ஒடேசா மற்றும் சைட்டோமிரி வரை பாதிக்கப்பட்டன.


கார்கிங் மற்றும் ஒடேசாவில் கட்டிடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகள் பெரிதும் சிதைந்துள்ளன. மேலும் பல பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டதோடு தலைநகர் கீவ் மீதும் பெரியதாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


கிழக்கு நகரமான பாக்முட்டில் கடுமையான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரைன் மீது தனது படையெடுப்பை தொடங்கினார்.


அதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் அகதிகளாக ஆனார்கள்.


துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள எரிசக்தி நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால், மின்வெட்டு ஏற்பட்டது என்று அதன் கவர்னர் மக்சிம் மார்சென்கோ தெரிவித்துள்ளார்.


மேலும் குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டன, ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் Avril Haines, ஜனாதிபதி புடின் பல ஆண்டுகளாக போரை இழுத்தடிக்க திட்டமிட்டிருக்கலாம் ஆனால் ரஷ்யா இந்த ஆண்டு பெரிய புதிய தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு வலுவாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.


ரஷ்யா பல மாதங்களாக பாக்முத்தை கைப்பற்ற முயற்சித்து வருகிறது, ஏனெனில் இரு தரப்பினரும் போரில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

உக்ரைன் நகரங்களைச் சிதைக்கும் ரஷ்யாவின் வான்வெளித் தாக்குதல்: பதற்றத்தில் மக்கள் SamugamMedia ரஷ்யா உக்ரைன் முழுவதும் வான்வெளி தாக்குதலை நடத்தியதால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் சிதைந்து பெரிய அளவு இழப்புகளை சந்தித்துள்ளன. அந்நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.ரஷ்யா உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியதில், உக்ரைனின் வடக்கு பகுதியான கார்கிங் முதல் தெற்கில் ஒடேசா மற்றும் சைட்டோமிரி வரை பாதிக்கப்பட்டன.கார்கிங் மற்றும் ஒடேசாவில் கட்டிடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகள் பெரிதும் சிதைந்துள்ளன. மேலும் பல பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டதோடு தலைநகர் கீவ் மீதும் பெரியதாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.கிழக்கு நகரமான பாக்முட்டில் கடுமையான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரைன் மீது தனது படையெடுப்பை தொடங்கினார்.அதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் அகதிகளாக ஆனார்கள்.துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள எரிசக்தி நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால், மின்வெட்டு ஏற்பட்டது என்று அதன் கவர்னர் மக்சிம் மார்சென்கோ தெரிவித்துள்ளார்.மேலும் குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டன, ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் Avril Haines, ஜனாதிபதி புடின் பல ஆண்டுகளாக போரை இழுத்தடிக்க திட்டமிட்டிருக்கலாம் ஆனால் ரஷ்யா இந்த ஆண்டு பெரிய புதிய தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு வலுவாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.ரஷ்யா பல மாதங்களாக பாக்முத்தை கைப்பற்ற முயற்சித்து வருகிறது, ஏனெனில் இரு தரப்பினரும் போரில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement