பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர்.
மேலும் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் பிக்பொஸ் வீட்டிற்குள் நுழைந்த சம்யுக்தா பாலாவிடம் பேசிக் கொண்ட ஒரு விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தனியே பேசிக் கொண்டிருக்கையில் சம்யுக்தா கூறும் பொழுது
“வெளியே அவ்வளவு ஓட்டு வித்தியாசம். அவருக்கு 2000 என்றால், உங்களுக்கெல்லாம் 1000 போல, அவ்வளவு வித்தியாசம். ஓட்டின் அடிப்படையில் பார்த்தால் ஆரி தான்” என்பது போல் கூறுகிறார்.
மேலும் இதை பார்த்த பாலா “இதற்கு நாங்கள் எல்லாரும் ஏன் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும்” என்பது போல் கேள்வி எழுப்புகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் டிவிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். “வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது சரியில்லை. அனைத்து ரகசியங்களையும் வெளிப்படையாக கூறி விட்டனர். அத்தோடு இது பார்ப்பவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமே சுவாரஸ்யத்தை குறைத்துள்ளது” என்று கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
- யாழில் மாஸ்டர் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கிற்கு பூட்டு
- பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ரமேஷ் செய்த கேவலமான செயல்..!தீயாய் பரவும் வீடியோ!
- ‘மாஸ்டர்’ஆஸ்திரேலியாவிலும் சாதனை- குதூகலத்தில் ரசிகர்கள்!
- பிக்பாஸ் பைனலுக்கு முன் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் யார்? வெளியானது தகவல்; யாரும் எதிர்பாராமல் நடந்துவிட்டதே…!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி; இந்தியளவில் வேற ‘லெவல்’ ட்ரெண்டிங்-அப்பிடி என்ன நடந்துச்சு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்