ஆரிக்கு சனம் ஷெட்டி முத்தம் கொடுக்கும் அன்சீன் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 4வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு, தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
சனம் ஷெட்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததே உங்களை பார்க்கத்தான் ஆரி என கூறிய நிலையில், அடுத்ததாக அவருக்கு முத்தமும் கொடுத்துள்ளார்.
இந்த காட்சியை ஏன் அன்சீனில் வச்சீங்க என பார்வையாளர்கள், பிக் பாஸ் எடிட்டரை கண்டவாறு திட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆரியை அனைவரும் ஒதுக்கித் தள்ளிய நிலையில், சனம் ஷெட்டி மட்டுமே பல இடங்களில் ஆரிக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
பெரிய அளவில் நட்பு ஏதும் பாராட்டவில்லை என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது நேர்மையின் சின்னம் ஆரி என சனம் பேசியது பாராட்டுக்களை அள்ளியது.
சனம் ஷெட்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர மாட்டார் என்றும், அவரை திட்டமிட்டே விஜய் டிவி வெளியே அனுப்பியது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
சனம் ஷெட்டியை விட அந்த வாரம் யாருமே குறைவான வாக்குகள் பெறவில்லையா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் இந்த வாரம் அதிரடி என்ட்ரி கொடுத்த சனம் ஷெட்டிக்கு தனி புரமோ ஏதும் போடாமல் பாரபட்சம் காட்டியது விஜய் டிவி.
மேலும், சனம் ஷெட்டி பேசும் பல காட்சிகளையும் அன்சீனில் தூக்கிப் போட்டு வருகின்றனர்.
வந்ததே உங்களுக்காகத்தான் ஆரி என சனம் சொன்ன அந்த வார்த்தை ஆரிக்கு பெரிய ஆறுதலை கொடுத்தது ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா பேசும் காட்சிகளை குறைவாகவே ஒளிபரப்புகின்றனர்.
தேவையில்லாத பல காட்சிகளை வைத்தே நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இந்நிலையில், ஆரிக்கும் அனிதாவுக்கும் சனம் ஷெட்டி முத்தம் கொடுத்த அன்சீன் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
ஆரி, அனிதா, சனம் ஷெட்டிக்குத் தான் இறுதிச்சுற்றுக்கு வர மற்ற போட்டியாளர்களை விட அதிக தகுதிகள் உள்ளன என்றும் சுரேஷ் தாத்தாவும் அதற்கு தகுதியானவர் தான் என்றும், ஆனால், மக்கள் ஓட்டு, மக்கள் தீர்ப்பு என ஆஜீத், கேபி, ஷிவானி, சோம் உள்ளிட்டவர்களை கடைசி வரைக்கும் கொண்டு வந்ததே பித்தலாட்டம் தான் என்கின்றனர்.
பிற செய்திகள்:
- பிக்பாஸ் வீட்டை விட்டு பணத்துடன் வெளியேறிய கேப்ரில்லாவிற்கு காத்திருந்த அதி… !
- பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி-கடுப்பான பாலா?
- ‘ஈஸ்வரன்’படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
- பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் அக்காவும் ஒரு நடிகைதான்; அவர் நடித்த திரைப்படம் எது தெரியுமா?
- திடீரென்று என்ன நடந்துச்சு… பாலாஜி ஷிவானி பேசிய விடயங்கள்; கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
- பிரபல இயக்குனர் வீட்டில் இன்று காலை நடந்த பெரும் சோகம்!
- மாஸ்டர் ஹீரோயினை வருத்தப்பட வைத்த நியூஸ்..!
- ஓவியாவின் காதலர் இவர் தானாம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்