• Apr 25 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு உதவிகள்! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 6:25 pm
image

Advertisement

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு ரூபா 290,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.


திருகோணமலை மாவட்டம் -  செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலைக்கு மூன்றாவது தடவையாக ரூபா 100,000ம் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 150000/- வழங்கப்பட்டுள்ளது.


இதே வேளை மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்காக இரண்டாம் கட்டமாக 100,000 ரூபா நிதி பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூபா 100,000 வழங்கப்பட்டுள்ளது.


மாங்குளம்  -  பனிக்கன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு  வீடு கட்டுமானத்திற்காக ரூபா  75,000  வழங்கப்பட்டது.ஏற்கனவே ரூபா 125,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி -  பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கின்ற விசேட தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு 2ம் கட்டமாக சமையலறை கட்டுமானத்திற்காக 15,000 ரூபா இன்று  வழங்கப்பட்டது. முதல்கட்டமாக ரூபா 50, 000  வழங்கப்பட்டிருந்தது.


இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச்  சென்று தனது தொண்டர்கள் சகிதம் வழங்கி வைத்தார்.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.


அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரி அவர்களிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மருந்து பொருட்கள் சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு உதவிகள் SamugamMedia சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு ரூபா 290,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்டம் -  செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலைக்கு மூன்றாவது தடவையாக ரூபா 100,000ம் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 150000/- வழங்கப்பட்டுள்ளது.இதே வேளை மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்காக இரண்டாம் கட்டமாக 100,000 ரூபா நிதி பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூபா 100,000 வழங்கப்பட்டுள்ளது.மாங்குளம்  -  பனிக்கன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு  வீடு கட்டுமானத்திற்காக ரூபா  75,000  வழங்கப்பட்டது.ஏற்கனவே ரூபா 125,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி -  பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கின்ற விசேட தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு 2ம் கட்டமாக சமையலறை கட்டுமானத்திற்காக 15,000 ரூபா இன்று  வழங்கப்பட்டது. முதல்கட்டமாக ரூபா 50, 000  வழங்கப்பட்டிருந்தது.இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச்  சென்று தனது தொண்டர்கள் சகிதம் வழங்கி வைத்தார்.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரி அவர்களிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த மருந்து பொருட்கள் சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement