யாழில் புடவைக்கடைக்கு தீ வைப்பு: 3 பேர் கைது

175

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள புடவைக்கடைக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (21) இரவு குறித்த பகுதியிலுள்ள புடவைக்கடை ஒன்றின் மீது இன்ந்தெரியாத வன்முறைக் கும்பலொன்று தீயிட்டு அழிக்க முற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன் அவர்கள் கைவசமிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு வாள் என்பள கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

தொழில் போட்டி காரணமாகவே குறித்த வன்முறைச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என கூறப்படும் நிலையில் மேலதிக விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: