தனது மகளுக்கு தாயாக மாறிய சதீஸ்..! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

525

நடிகர் சதீஷ், தனது மகளுக்காக தாயாக மாறியதாக ட்விட்டர் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார்

‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம், நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயாகனாக அறிமுகமாகியுள்ளார்.

அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்கிறார்.

இந்த நிலையில், பெண் வேடத்தில் தனது மகளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம்பிடிக்கும் போதெல்லாம்…இனி கேப்ப ..! என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குழந்தைக்காக தாயாக மாறிய சதீஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: