• Apr 24 2024

யாழ் விடுதிகளில் சுவர்களுக்குள் ஒளிந்துள்ள இரகசியக் கமராக்கள்- மக்களே அவதானம்!

Tamil nila / Jan 19th 2023, 12:05 pm
image

Advertisement

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.


அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்து அறைகளிலும் திருட்டுத்தனமாக கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது.


இதனையடுத்து இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் விடுதிகளில் சுவர்களுக்குள் ஒளிந்துள்ள இரகசியக் கமராக்கள்- மக்களே அவதானம் யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்து அறைகளிலும் திருட்டுத்தனமாக கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது.இதனையடுத்து இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement