நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா, இந்திய பிரதான பொருளாதார ஆலோசகர் வீ. ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் இந்திய பொருளாதார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிற செய்திகள்
- இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!
- பாத்திரத்தாலேயே முதலையை அடித்து விரட்டிய முதியவர்! – வைரலாகும் காணொளி
- எரிபொருள் நெருக்கடி; இனி வீட்டிலேயே பிரசவம் பார்க்க தயார்! – சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம்
- இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதில் ஏன் தாமதம்? வெளியான காரணம்
- தாய், மகள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்! – பொலிஸார் தீவிர விசாரணை