வடக்கில் நேற்று ஏழு பேர் மரணம்!

100

வடக்கில் நேற்று 159 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கில் செப்ரெம்பர் மாதத்தில், நேற்று தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6,667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையுடன் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையில், நேற்று யாழ்ப்பாணத்தில் 36 பேரும், வவுனியாவில் 61 பேரும், கிளிநொச்சியில் 39 பேரும், முல்லைத்தீவில் 18 பேரும், மன்னாரில் 5 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், யாழில் 2 பேரும், வவுனியாவில் 3 பேரும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில், 2021 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 33,953 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையுடன், 649 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: